UPDATED : நவ 24, 2026 05:36 PM
ADDED : நவ 24, 2026 05:36 PM
காப்பக வீரர் பதக்கம் வென்று அசத்தல்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், மாற்று திறனாளிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த காப்பக வீரர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று, மூன்றாம் இடம் பிடித்தார். மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்ததால், அவருக்கு 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்த தொகையை அவரது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளோம் என, கீழ்ப்பாக்கம், மனநல காப்பக டாக்டர் சங்கீதா தெரிவித்தார்.
பளு துாக்குதல்: எஸ்.ஆர்.எம்., 2வது இடம்
சென்னை விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், தென் மண்டல அளவில் பல்கலைகளுக்கு இடையிலான பளு துாக்கும் போட்டி, மாமல்லபுரம் அடுத்த பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், எட்டு மாநிலங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பல்கலைகளில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாணவர்களில், மதுரை காமராஜர்; சென்னை எஸ்.ஆர்.எம்., மங்களூரு பல்கலை அணிகள், முறையே முதல் மூன்று இடங்களை வென்றன.
