/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
17 குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
/
17 குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
ADDED : டிச 09, 2024 03:38 AM

துரைப்பாக்கம்:ஓ.எம்.ஆர்., அருகில் உள்ள, கண்ணகிநகர், எழில்நகர் மற்றும் சுனாமிநகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,704 வீடுகள் உள்ளன. இங்கு, முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர். அதேபோல், விளையாட்டிலும் ஆர்வம் காட்டும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்காக, ரோலக்ஸ், சக்சஸ், ராயல், வீரமங்கை, புளூ ஸ்டார் போன்ற பெயர்களில், 17 விளையாட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில், 320 ஆண்கள், 123 பெண்கள் உள்ளனர். ஒவ்வொரு குழுக்களுக்கும், தலா, 10,000 ரூபாய் மதிப்புள்ள, விளையாட்டு பொருட்கள் வழங்க, வாரியம் முடிவு செய்தது.
கிரிக்கெட், கூடைபந்து, கால்பந்து, சதுரங்கம் போன்ற, 10 விளையாட்டுகளுக்கான பொருட்கள் வழங்கப்பட்டன.
இவற்றை, சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த்ரமேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில், வாரிய அதிகாரிகள், விளையாட்டு பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.