sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' போட்டி தமிழக வீரர் - வீராங்கனையர் 'சாம்பியன்'

/

தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' போட்டி தமிழக வீரர் - வீராங்கனையர் 'சாம்பியன்'

தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' போட்டி தமிழக வீரர் - வீராங்கனையர் 'சாம்பியன்'

தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' போட்டி தமிழக வீரர் - வீராங்கனையர் 'சாம்பியன்'


ADDED : மே 09, 2025 11:59 PM

Google News

ADDED : மே 09, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஐந்தாவது தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' சாம்பியன்ஷிப் போட்டி, பெங்களூரில் நடந்தது. போட்டியில், ஐந்து மாநிலங்களில் இருந்து, 90 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, 11 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.

இதில், ஆண்களுக்கான டி.பி.பி., - 9 ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த பி.ஹரிநாராயணன், 1,089 - - 1,058 என்ற புள்ளிகளில், கர்நாடக வீரர் சுஜித்சிங்கை தோற்கடித்து, தங்கம் வென்றார்.

இரட்டையர் பிரிவிலும், தமிழக வீரர்கள் ஹரிநாராயணன் - சாந்தமுத்துவேல் ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.

அதேபோல், பெண்கள் டி.பி.பி., - 9 ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், தமிழகத்தின் மாரீஸ்வரி, 375 - 327 என்ற புள்ளிகளில், கர்நாடக வீராங்கனை ஜெயரத்தினாவை தோற்கடித்து தங்கம் வென்றார்.

அதேபோல், இரட்டையர் பிரிவில், தமிழக வீராங்கனையர் மாரீஸ்வரி - கிருஷ்ணவேணி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த அந்தோணி, 219 புள்ளிகள் கைப்பற்றி வெள்ளி பதக்கத்தையும், இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினார்.






      Dinamalar
      Follow us