/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி ஊழியர்களுக்கான கிரிக்கெட் திடக்கழிவு மேலாண்மை துறை 'சாம்பியன்'
/
மாநகராட்சி ஊழியர்களுக்கான கிரிக்கெட் திடக்கழிவு மேலாண்மை துறை 'சாம்பியன்'
மாநகராட்சி ஊழியர்களுக்கான கிரிக்கெட் திடக்கழிவு மேலாண்மை துறை 'சாம்பியன்'
மாநகராட்சி ஊழியர்களுக்கான கிரிக்கெட் திடக்கழிவு மேலாண்மை துறை 'சாம்பியன்'
ADDED : மார் 26, 2025 11:51 PM

சென்னை, சென்னை மாநகராட்சி ஆண்டு விளையாட்டு போட்டிகள், கடந்த 10ம் தேதி முதல், நகரின் பல பகுதிகளில் நடந்து வந்தன.
போட்டிகளில், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என, 2,416 பேர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
நேற்று முன்தினம் காலை, பெரியமேடு, கண்ணப்பர் திடல் மற்றும் ஷெனாய் நகர் கிரசன்ட் மைதானத்தில், ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் துவங்கின. மொத்தம் 47 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அனைத்து போட்டிகள் முடிவில், தலைமை அலுவலகத்தின் திடக்கழிவு மேலாண்மை துறை மற்றும் கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. எட்டு ஓவர்களுக்கான இறுதிப் போட்டி, நேற்று காலை, கண்ணப்பர் திடலில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த, கோடம்பாக்கம் மண்டலம் அணி, எட்டு ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஐந்து விக்கெட் இழப்புக்கு, 46 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, திடக்கழிவு மேலாண்மை துறை அணி, துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி ஓவரில், ஆறு பந்துக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டது.
விறுவிறுப்பான ஆட்டத்தில், முதல் பந்தில் ஒரு ரன்னும், இரண்டாவது பந்தில் பவுண்டரியுடன் ஆட்டம் சூடுபிடித்தது.
பின், கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தி, 47 ரன்களை அடித்து, திடக்கழிவு மேலாண்மை துறை அணி வெற்றி பெற்றது.