/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து போட்டி பைனலில் வேலம்மாள் அணிகள்
/
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து போட்டி பைனலில் வேலம்மாள் அணிகள்
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து போட்டி பைனலில் வேலம்மாள் அணிகள்
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து போட்டி பைனலில் வேலம்மாள் அணிகள்
ADDED : ஆக 08, 2025 02:02 AM

சென்னை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், பல்வேறு வயது பிரிவில், வேலம்மாள் பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஆர்.எம்.கே., பாடசாலை பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
மாநிலம் முழுதும் இருந்து, 200 பள்ளிகளில் இருந்து, 5,000 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை நடந்த 14 வயது மாணவியருக்கான அரையிறுதியில், பருத்திப்பட்டு வேலம்மாள் அணி, 19 - 15 என்ற கணக்கில் கே.கே., நகர் பி.எஸ்.பி.பி., அணியை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதேபோல், மாணவர்கள் பிரிவில் பொன்னேரி வேலம்மாள் அணி, 76 - 59 என்ற கணக்கில் ஆலப்பாக்கம் வேலம்மாள் அணியை வீழ்த்தி தகுதி பெற்றது.
மாணவருக்கான 17 வயது பிரிவில், ஆலப்பாக்கம் வேலம்மாள் அணி, 67 - 41 என்ற கணக்கில், மதுரை கவி சர்வதேச பள்ளியையும், மற்றொரு அரையிறுதியில், பொன்னேரி வேலம்மாள் அணி, 39 - 15 என்ற கணக்கில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியையும் வீழ்த்தின. மாணவியர் பிரிவில், டி.ஏ.வி., அணி, 50 - 32 என்ற கணக்கில் பவன்ஸ் பள்ளியை வென்றது.
அதே மாணவர் பிரிவில், 19 வயதில், ஆலப்பாக்கம் வேலம்மாள் அணி, 48 - 28 என்ற கணக்கில், நுங்கம்பாக்கம் பத்மா ஷேசாத்திரி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.