/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச ஓபன் கராத்தேவில் சென்னை மாணவி சாதனை
/
சர்வதேச ஓபன் கராத்தேவில் சென்னை மாணவி சாதனை
ADDED : மே 23, 2025 12:42 AM

சென்னை, மலேஷியாவில் நடந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், கட்டா மற்றும் குமிட் ஆகிய இரு பிரிவுகளிலும், சென்னை கல்லுாரி மாணவி, தலா ஒரு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மலேஷியா, ஈப்போ நகரில், 21வது ஓகினாவா சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில் இந்தியா, ரஷ்யா, கஜகஜ்தான், உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை, மலேஷியா உட்பட பல நாடுகளில் இருந்து, 1,500 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இந்தியா சார்பில், சென்னை, செம்மஞ்சேரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி மாணவி யஷாவினி, 18, பங்கேற்றார்.
இவர், 68 கிலோவுக்கு உட்பட்ட 'கட்டா' பிரிவில் ஆறு சுற்றுகளிலும், 'குமிட்' பிரிவில் ஐந்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று தலா ஒன்று என, இரண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். பல்வேறு தரப்பினர், யஷாவினியை பாராட்டி வருகின்றனர்.