/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சைக்கிளிங்'கில் அசத்திய எஸ்.ஆர்.எம்., மாணவி
/
'சைக்கிளிங்'கில் அசத்திய எஸ்.ஆர்.எம்., மாணவி
ADDED : ஏப் 17, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
ராஜஸ்தானில் நடந்த அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான 'சைக்கிளிங்' போட்டியில், எஸ்.ஆர்.எம்., மாணவி தங்கம் வென்றார்.
மகாராஜா கங்கா சிங் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான 'சாலை சைக்கிளிங்' போட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானெர் நகரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது.
போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, ஏராளமான பல்கலை மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 40 கி.மீ., துார தனி நபருக்கான போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., மாணவி தன்யாதா, முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.