/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு செய்திகள் மாநில கராத்தே சாம்பியன்ஷிப் 300 வீரர்கள் பங்கேற்று அசத்தல்

ADDED : அக் 28, 2024 01:50 AM

சென்னை:பள்ளிக்கரணையில் நேற்று நடந்த மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
'சென்கோன் இஷின் ரியு கராத்தே டோ' சங்கம் சார்பில், ஐந்தாம் ஆண்டு, மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, பள்ளிக்கரணை, நீலாம்பாள் மஹாலில் நேற்று நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் இருந்து, 6 முதல் 18 வயது வரை, 300க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.
போட்டிகள் குமிட், கட்டா என, இரண்டு சண்டை பிரிவுகளில் நடந்தன.
ஒட்டு மொத்த போட்டியில், விஸ்டா சர்வதேச பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் குவித்து, முதல் இடம் பிடித்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிறுவர் சிறுமியருக்கு, கராத்தே டோ சென்ஷூ கன் அகாடமி சார்பில், சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்கள், தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.