/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு மாநில குத்துச்சண்டை இன்று இறுதி போட்டி
/
விளையாட்டு மாநில குத்துச்சண்டை இன்று இறுதி போட்டி
ADDED : ஜூன் 29, 2025 12:27 AM
சென்னை, ஆர்.ஆர்.ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு மாநிலக் குத்துச்சண்டை சங்கம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் நேற்று துவங்கியது.
போட்டியில் மாநிலத்தின் 650க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். 9 வயது முதல் 12 வயது வரையிலான கப் கேட்டகரி, சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், எலைட் என ஐந்து பிரிவாக நாக் - அவுட் முறையில் நடக்கின்றன. இதில் கப் கேட்டகரி சிறுமியருக்கான அரையிறுதி போட்டியில் 32 முதல் 34 கிலோ எடை பிரிவிற்கான முதல் போட்டியில், கஜா கிளப்பின் எம்.கே.துர்காஸ்ரீ முதல் சுற்றில் எதிர்த்து மோதிய வேலுார் மாவட்ட வீராங்கனை தன்யாஸ்ரீயை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதி போட்டியில், கோல்டன் கிளப்பின் சம்ரிதா 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் எக்ஸ்.ஆர்.பாக்சிங் அணியின் சிவசங்கரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
இதே கப் பிரிவின் 34 முதல் 36 கிலோ எடை பிரிவில் பிட் பாக்ஸ் கிளப்பின் சமர்மதி, கோல்டன் கிளப்பின் தீப்தி மற்றும் 36 முதல் 38 கிலோ பிரிவில் ஒய்.பி.பி.சி., கிளப்பின் வி.கே.நைஷா, வி.எஸ்.பி.சி., கிளப்பின் டி.வி.யாஷினி ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று இறுதிப் போட்டி நடக்க உள்ளது.