/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்பர்ஷ்' - தொழுநோய் இன்று முதல் விழிப்புணர்வு
/
'ஸ்பர்ஷ்' - தொழுநோய் இன்று முதல் விழிப்புணர்வு
ADDED : ஜன 30, 2024 12:11 AM
சென்னை, ''கல்வி நிலையம், மருத்துவமனைகளில், 'ஸ்பர்ஷ்' - தொழுநோய் விழிப்புணர்வு முகாம் இன்று முதல் துவங்குகிறது,'' என, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்து உள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
மஹாத்மா காந்தியின் நினைவுநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஜன., 30ம் தேதி தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு, தமிழகத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம், இன்று துவங்கி, பிப்., 13 வரை அனுசரிக்கப்பட உள்ளது.
அந்நாட்களில் மாநிலம் முழுதும், அனைத்து கல்வி நிலையங்கள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகள், அரசு சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிறுவனங்களில் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
அதேபோல் சிகிச்சை முகாம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசுரம் வழங்கப்பட உள்ளது.
நம் மாவட்டத்தில், 10,000 மக்கள் தொகைக்கு நோய் பரவுதல், 0.15 விகிதமாக உள்ளது. இதை, 2027 ஆண்டிற்குள், தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர்தெரிவித்தார்.