/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீஆதிசங்கரர் தின வினாடி ---- வினா விருது வழங்கும் விழா கோலாகலம்
/
ஸ்ரீஆதிசங்கரர் தின வினாடி ---- வினா விருது வழங்கும் விழா கோலாகலம்
ஸ்ரீஆதிசங்கரர் தின வினாடி ---- வினா விருது வழங்கும் விழா கோலாகலம்
ஸ்ரீஆதிசங்கரர் தின வினாடி ---- வினா விருது வழங்கும் விழா கோலாகலம்
ADDED : ஜன 30, 2024 12:36 AM

கீழ்ப்பாக்கம், ஸ்ரீ வித்யாதீர்த்தா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ஆதிசங்கரர் தின நிகழ்வாக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான வினாடி - வினா போட்டியின் விருது வழங்கும் விழா, கீழ்ப்பாக்கம் பவன் ராஜாஜி வித்யாஷ்ரமத்தில் நேற்று நடந்தது.
ஸ்ரீ பாரதி தீர்த்தா சுவாமிகள் மற்றும் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் ஆசீர்வாதத்துடன் நடந்த நிகழ்வில், சென்னை சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தைச் சேர்ந்த எஸ்.என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஜூனியர் பிரிவிற்கான போட்டியில், கீழ்ப்பாக்கம் பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி; சீனியர் பிரிவிற்கான போட்டியில் குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எப்., விவேகானந்தா வித்யாலயா பள்ளியும் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு, ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகள் வெள்ளி கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், சென்னை சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா பேசுகையில், பாரதத்தை விட்டு பிற நாட்டில் ஆதிசங்கரர் பிறந்திருந்தால், அவரது பிறந்த நாள் உலக தத்துவவாதிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். ஆதிசங்கரர் தன் 8 வயதில் ஓம்காரேஷ்வர் கோவிலுக்கு 1,200 -- 1,500 கி.மீ., நடந்து சென்றார். ஆதிசங்கராச்சாரியார் இல்லை என்றால், நீங்களும் நானும் இன்று ஹிந்துக்களாக இருந்திருக்க மாட்டோம்.
வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை, ஓம்காரேஷ்வர் கோவிலுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். ஓம்காரேஷ்வரில் 108 அடி உயர ஆதிசங்கராச்சாரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீ வித்யாதீர்த்தா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.