/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம்
/
எஸ்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : நவ 16, 2025 02:57 AM

மணலி: மணலி, நெடுஞ்செழியன் தெருவில், டயர் மற்றும் தார்ப் பாய்களுக்கு பயன்படுத்தும் நைலான் இழை தயாரிக்கும், எஸ்.ஆர்.எப்., தொழிற்சாலை செயல்படுகிறது; 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நிர்வாகம், எஸ்.ஆர்.எப்., மற்றும் எஸ்.ஆர்.எப்., பாலிமர்ஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் சங்க செயலர் உட்பட ஐந்து பேரை, பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், 20 மாதமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். 2014ல், திருத்தி அமைக்கப்பட்ட போனஸ் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மணலி, பாரதியார் தெருவில் ஊழியர்கள் நேற்று காலை பட்டினி போராட்டம் நடத்தினர்.
இதில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது பாதுகாப்பிற்காக எஸ்.ஆர்.எப்., நிறுவனம் மற்றும் போராட்டம் நடக்கும் இடத்தில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

