/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துாரில் அழுகிய நிலையில் இலங்கை பெண் உடல் மீட்பு
/
கொளத்துாரில் அழுகிய நிலையில் இலங்கை பெண் உடல் மீட்பு
கொளத்துாரில் அழுகிய நிலையில் இலங்கை பெண் உடல் மீட்பு
கொளத்துாரில் அழுகிய நிலையில் இலங்கை பெண் உடல் மீட்பு
ADDED : ஜூலை 22, 2025 12:29 AM
கொளத்துார், வீட்டில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 47; கன்டெய்னர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி சரஸ்வதி, 38; தையல் தொழில் செய்து வந்தார். இவர் களுக்கு, 15 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
சிகரெட் மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையான சரஸ்வதி, கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒன்றரை மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்து கொளத்துார், தனம்மாள் நகர் முதல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.
கடந்த 18ம் தேதி சரஸ்வதியை கணேசமூர்த்தி போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், போன் எடுக்கவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப் பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை சரஸ்வதி வசித்த வீட்டின் கதவு திறந்திருந்தது. மேலும், துர்நாற்றமும் வீசியது. இது குறித்து, கீழ் வீட்டில் தங்கியிருந்த முனுசாமி என்பவர், கொளத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து பார்த்த போது, சரஸ்வதி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என தெரிவித்த போலீசார், உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.