/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலங்கை பெண் மர்ம மரணம் உடன் இருந்த நபருக்கு வலை
/
இலங்கை பெண் மர்ம மரணம் உடன் இருந்த நபருக்கு வலை
ADDED : ஜூலை 23, 2025 12:32 AM
கொளத்துார்,கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதி, 38. தையல் தொழில் செய்து வந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான சரஸ்வதி, கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒன்றரை மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்து கொளத்துார், தனம்மாள் நகர் முதல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் அழுகிய நிலையில் சரஸ்வதி உடல் மீட்கப்பட்டது.
விசாரணையில், சரஸ்வதி இறந்த அன்று இளைஞர் ஒருவர் உடன் இருந்த தாகவும், இருவரும் ஒன்றாக இருந்தபோது, சரஸ்வதி இறந்ததும் தெரிய வந்தது.
சரஸ்வதியின் இரு சக்கர வாகனம், மொபைல் போன் ஆகியவற்றோடு தப்பியோடிய இளைஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

