/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீ ராதா கல்யாண உத்சவம் துவக்கம்
/
ஸ்ரீ ராதா கல்யாண உத்சவம் துவக்கம்
ADDED : ஜூலை 23, 2025 11:56 PM
பெரம்பூர், ஸ்ரீ கீத கோவிந்த மண்டலி சார்பில், பொன் விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராதா கல்யாண உத்சவம் நேற்று துவங்கியது.
ஸ்ரீ கீத கோவிந்த மண்டலியின் 50ம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, நேற்று பெரம்பூர் ஸ்ரீ சங்கராலயத்தில் ராதா கல்யாண உத்சவம் துவங்கியது.
வரும் 27ம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்வில், 25ம் தேதி வரை பெரம்பூர் சங்கராலயத்திலும், 26 மற்றும் 27ம் தேதிகளில் பெரம்பூர் அய்யப்பன் கோவிலிலும் நடக்க உள்ளது.
நேற்று மாலை கார்த்திக் பாகவதரின் நாம சங்கீர்த்தனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இரவு 7:00 மணிக்கு ரவி பாகவதர் குழுவின் திவ்ய நாம பஜனை நடந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் பஜனைகளும், நாம சங்கீர்த்தனமும் நடைபெற உள்ளன. வரும் 27ம் தேதி காலை 9:30 மணிக்கு, ஸ்ரீ ராதா கல்யாண உத்சவம் நடைபெறுகிறது.
மதியம் திருமாங்கல்ய தாரணமும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடக்கிறது. மதியம் ஆஞ்சநேய உற்சவமும் தொடர்ந்து மங்கள ஆரத்தி மற்றும் பாகவத ஆராதனை நடைபெற உள்ளது.