ADDED : மே 04, 2025 12:09 AM
சென்னை, ஸ்ரீசத்ய சாய் சேவா தமிழக அமைப்புகள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா, சென்னையில் இன்று நடத்தப்படுகிறது.
இதற்காக, ஸ்ரீசத்ய சாய் பிரேம ரதத்தின் பிரமாண்ட ஊர்வலம், நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வருகின்றன.
இந்நிகழ்ச்சி, பெரம்பூர், ஸ்ரீசத்ய சாய் நிவாஸில், காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. அங்கு, சுவாமிக்கு பூர்ணகும்பம், பல்லக்கு சேவை மற்றும் பஜனையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, காலை 10:15 மணிக்கு, ஸ்ரீசத்ய சாய் பிரேம ரதத்தை, ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர் மோகன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து, சாய் நிவாஸில் இருந்து புறப்படும் ரதமானது, அண்ணா நகர் சாய் சரணம், தி.நகர்., சாய் சரணம், சாய்புஷ்பாஞ்சலியை சுற்றி வலம் வருகிறது.
மாலை 5:15 மணிக்கு, ஆர்.ஏ.புரம், சாய் அரவிந்த் சமுதாய கூடம் நோக்கி ஊர்வலம் வருகிறது. பின், அங்கிருந்து சுந்தரத்திற்கு ரதம் வருகிறது. அங்கு மங்கள ஆரத்தி நடக்கிறது.
இந்நிகழ்வு குறித்த மேலும் தகவல்களுக்கு, ஆனந்த் - சாய் நிவாஸ்: 99400 93381, தினேஷ் - சாய் சரணம்: 97907 30966, வெங்கடேஷ் - சாய் புஷ்பாஞ்சலி: 98409 63626, சதாசிவம் - சுந்தரம்: 99414 10605 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
