/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் நாளில் மேடை ஏறுது ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம்
/
பொங்கல் நாளில் மேடை ஏறுது ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம்
பொங்கல் நாளில் மேடை ஏறுது ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம்
பொங்கல் நாளில் மேடை ஏறுது ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம்
ADDED : ஜன 12, 2025 12:27 AM

சென்னை,ராம பக்தியாலும், சங்கீர்த்தனத்தாலும் படித்தவர்களையும், பாமரர்களையும் ஒரு சேரப் பரவசப்படுத்திய மகான் தியாகராஜர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.
பழமையான மரபிசைக்கு புதிய பரிமாணம் கொடுத்தவர். அவரது கீர்த்தனைகளில் இசையும், இறையுணர்வும் இரண்டறக் கலந்திருக்கும்.
இவரின் சரித்திரத்தை, ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகமாக, நாட்டின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும், டி.வி.வரதராஜன் குழுவினரால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம், பொங்கல் தினமான வரும் 14ல், தி.நகர் வாணி மஹாலில் நடக்கவுள்ளது.
எழுத்தாளர் வீயெஸ்வி கதை, வசனத்தில், பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ பின்னணி இசையில், டி.வி.வரதராஜன் இயக்கி, ஸ்ரீ தியாகராஜராக வேடமேற்று நடிக்கிறார்.
175வது முறையாக மேடை ஏறும் இந்நாடகத்தில், சங்கீத மும்மூர்த்திகள் சந்தித்து, மூவரும் சேர்ந்து ராமனின் பெருமையை புகழ்ந்து பாடும் ஒரு புதிய காட்சியை, அறிமுகம் செய்கின்றனர்.
சில மாதங்களில் மேடையேற்ற இருக்கும் சங்கீத மும்மூர்த்திகள் நாடகத்திற்கு, ஒரு சிறந்த முன்னோட்டமாக அமையவிருக்கிறது இந்த புதிய காட்சியை அவசியம் அனைவரும் பார்த்து மகிழ வேண்டும் என, நாடக குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்.