தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிருங்கேரி - 2

சிருங்கேரி - 2

சிருங்கேரி - 2


ADDED : நவ 02, 2024 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2024 12:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிக தத்துவங்களை குரு இன்றி கற்றல் ஆபத்தானது

ஆன்மிக தத்துவங்களை குரு இன்றி கற்றல் ஆபத்தானது

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகளின் 107வது ஜெயந்தி நிகழ்ச்சியில், சிருங்கேரி சன்னிதானம் வழங்கிய அருளுரை:குரு இல்லாமல் ஆன்மிக தத்துவங்களை கற்றுக் கொள்வதும், அதை பிறருக்கு கற்பிப்பதும் பெரும் பாவம். இதை அனைவரும் உணர வேண்டும்.ஆன்மிக தத்துவங்களுக்கு மட்டுமல்ல, உளவியல் சார்ந்த விஷயங்களையும், அதற்கென உள்ள நிபுணர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல், அதனால் பிரச்னைகள்தான் வந்து சேரும். தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்துதான், குருநாதர்களும் தத்துவங்களை போதிக்க வேண்டும்.சனாதன தர்மத்தில் ஜபம், தியானம், அத்யயனம், அதாவது வேதங்கள் உள்ளிட்ட ஆன்மிக தத்துவங்களை கற்பது ஆகியவை முக்கிய கடமைகள். இதை செய்ய முடியாவிட்டால், சில மந்திரங்களை கற்று, அதை ஜபம் செய்து வரலாம். மந்திரங்களை ஜபம் செய்ய முடியாதவர்கள், கடவுளின் நாமங்களை மட்டுமாவது ஜபம் செய்ய வேண்டும். அப்போதுதான் மனதை நம் வழிக்கு கொண்டுவர முடியும்; கடவுளின் அருளையும் பெற முடியும்.இவ்வாறு அருளாசி வழங்கினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us