/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கியில் தெறிக்கவிட்ட எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி
/
ஹாக்கியில் தெறிக்கவிட்ட எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி
ஹாக்கியில் தெறிக்கவிட்ட எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி
ஹாக்கியில் தெறிக்கவிட்ட எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி
ADDED : ஜூலை 27, 2024 12:50 AM

சென்னை, 'வீ ஆர் பார் ஹாக்கி' அமைப்பு சார்பில், நான்காம் ஆண்டிற்கான மகளிர் ஹாக்கி போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கிறது.
இதில், ஈரோடு பி.கே.ஆர்., - கோவில்பட்டி ராஜிவ் காந்தி சங்கம், தமிழக போலீஸ், வேலுார் ஹாக்கி அகாடமி, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி உட்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 'ரவுண்ட் ராபின்' முறையில் மோதி வருகின்றன.
நேற்று நடந்த முதல் போட்டியில், டபிள்யூ.ஆர்.ெஹச்., ஸ்டிரைக்கர்ஸ் அணி, 8 - 0 என்ற கோல் கணக்கில் கிரேட்டர் சென்னை அணியை தோற்கடித்ததது. அடுத்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி, 20 - 6 என்ற கணக்கில் ஆவடி ஐ.எச்.எம்., அணியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் ஆர்.வி., அகாடமி 14 - 4 என்ற கணக்கில் கோவை கே.ஓ.எம்., அணியையும், நெல்லை ஹாக்கி அகாடமி, 3 - 0 என்ற கணக்கில் இ.எப்.இ.இ., மாரிஸ் அணியையும் தோற்கடித்தன.
மதியம் நடந்த, எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹஷாஸ்டல்ஸ் எக்சலன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து நடந்த போட்டியில், ஒலிம்பியன் பாஸ்கரன் அகாடமி அணி, 2 - 0 என்ற கணக்கில் மேஜர் ஜான்ஸ் ராபர்ட் அகாடமியை வீழ்த்தியது.