/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம்., அபாரம்
/
மாநில வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம்., அபாரம்
ADDED : ஆக 10, 2025 12:15 AM

சென்னை, மதுரையில் நடந்த மாநில வாலிபால் போட்டியில், அபாரமாக விளையாடிய எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, சாம்பியன் கோப்பையை வென்றது.
அமெரிக்கன் கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் போட்டி மதுரையில் நடந்தது. இதில் 20 அணிகள் பங்கேற்றன.
போட்டிகள் 'நாக் - அவுட்' கம் லீக் முறையில் நடத்தப்பட்டது. அரையிறுதி வரை 'நாக் - அவுட்' முறையிலும், அரையிறுதிக்கு தேர்வாகும் நான்கு அணிகள் 'லீக்' முறையிலும் மோதின. இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி முதல் இடத்தை பிடிக்கும்.
அந்த வகையில் எஸ்.ஆர்.எம்., அணி அதிக புள்ளிகள் பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி லீக் சுற்றின் முதல் போட்டியில், ஜேப்பியார் அணியை 23 -- 25, 25- - 23, 25- - 21 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது.
அடுத்து, லயோலா அணிக்கு எதிரான போட்டியில் 25 - 20, 25 - -23, 25 - -17 என்ற புள்ளிக்கணக்கிலும், அமெரிக்கன் கல்லுாரிக்கு எதிரான போட்டியில் 25 - 20, 25- - 17, 25 - -18 என்ற புள்ளிக்கணக்கிலும் வெற்றி பெற்று, 'சாம்பியன்' கோப்பையை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை ஜேப்பியார் அணி பிடித்தது.