/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 லட்சம் பேருக்கு இதய பாதிப்பு எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் தகவல்
/
40 லட்சம் பேருக்கு இதய பாதிப்பு எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் தகவல்
40 லட்சம் பேருக்கு இதய பாதிப்பு எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் தகவல்
40 லட்சம் பேருக்கு இதய பாதிப்பு எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் தகவல்
ADDED : மார் 19, 2025 12:33 AM
சென்னை, ''இந்தியாவில் 40 லட்சம் பேர், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என, எஸ்.ஆர்.எம்., குழுமத் தலைவர் சத்யநாராயணன் தெரிவித்தார்.
எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை சார்பில், இதய மருத்துவ கருத்தரங்கம், சமீபத்தில் சென்னையில் நடந்தது. கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட, இதய நிபுணர்கள் பங்கேற்றனர்.
இதய மின்னணுவியல், சீரற்ற இதய துடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள், சிகிச்சைகள், தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கருத்தரங்கில், எஸ்.ஆர்.எம்., குழுமத் தலைவர் சத்யநாராயணன் பேசியதாவது:
இந்தியாவில் மேற்கொள்ளப்படும், இதய சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதே, கருத்தரங்கின் இலக்கு.
உலக அளவில், இதய பாதிப்புகளால், 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 20 முதல் 40 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், சிகிச்சை அளிக்கும் பெரும் சவாலை ஊக்குவிக்க, இதுபோன்ற கருத்தரங்குகள் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.