ADDED : செப் 21, 2024 12:15 AM

சென்னை,
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், 'ஏ' டிவிஷன் வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டி.ஜி.வைஷ்ணவ், வருமான வரி, ஐ.சி.எப்., உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்று உள்ளன.
நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி 3 - 1 என்ற 'செட்' கணக்கில் ஐ.ஓ.பி., வங்கியையும், இந்தியன் வங்கி அணி, 3 - 0 என்ற செட் கணக்கில் டி.ஜி.வைஷ்ணவ் அணியையும் தோற்கடித்தன.
போட்டியில், ஐ.ஓ.பி., வீரர் சந்தோஷ், இந்தியன் வங்கி வீரர் விஷ்ணு ஆகியோர் சிறந்த வீரராக தேர்வாகி, தலா 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வென்றனர்.
இதுவரை நடந்த போட்டிகள் அடிப்படையில், எஸ்.ஆர்.எம்., மற்றும் இந்தியன் வங்கி அணிகள், தலா 14 புள்ளிகள் பெற்று, முதல் இரண்டு இடங்களில் முன்னிலையில் உள்ளன.
டி.ஜி.வைஷ்ணவ் அணி 10 புள்ளிகளில், மூன்றாம் இடத்தில் உள்ளது. போட்டிகள் தொடர்ந்து நாளை வரை நடக்கின்றன.