/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய டிரையத்லான் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவிக்கு 'தங்கம்'
/
தேசிய டிரையத்லான் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவிக்கு 'தங்கம்'
தேசிய டிரையத்லான் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவிக்கு 'தங்கம்'
தேசிய டிரையத்லான் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவிக்கு 'தங்கம்'
ADDED : பிப் 05, 2026 05:57 AM

சென்னை: தேசிய டிரையத்லான் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
'டிரையத்லான்' என்பது நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து நடத்தப்படும் சாகச விளையாட்டு போட்டி. அமெரிக்காவில் துவங்கிய இப்போட்டி, தற்போது நம் நாட்டிலும் பிரபலமாகி உள்ளது.
அந்த வரிசையில், தேசிய டிரையத்லான் சங்கம் சார்பில், தேசிய ஓபன் டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டி, கேரளா மாநிலம் கோழிக்கோடில் நடந்தது. இதில், நாடு முழுதும் இருந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த 50 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், 1.50 கி.மீ., நீச்சல்; 40 கி.மீ., சைக்கிளிங்; 10 கி.மீ., ஓட்டம் என, போட்டி அறிவிக்கப்பட்டு நடந்தது. இதில், தமிழகம் சார்பில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி கீர்த்தி போட்டியிட்டார்.
இதில், நீச்சல் போட்டியை 24 நிமிடங்களிலும், சைக்கிளிங் போட்டியை ஒரு மணி, 7 நிமிடங்களிலும், ஓட்டப்பந்தயத்தை 39 நிமிடங்களிலும் நிறைவு செய்தார். மொத்தம் 2 மணி நேரம் 10 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து, முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

