ADDED : ஜன 08, 2024 01:05 AM
சென்னை:ஜெய்ப்பூர், மணிபால் பல்கலையில், 3 முதல் 6ம் தேதி வரை, அகில இந்திய பல்கலை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.
இந்திய அளவில், மண்டலம் வாரியாக வெற்றி பெற்ற 32 பல்கலை அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
இதில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் குஜராத் பல்கலை அணியை, 3 -- -0 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வீரர்கள் வீழ்த்தினர்.
காலிறுதியில், உ.பி.,யின் சவுத்திரி சரண்சிங் பல்கலை அணியை 3- - 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதியில், தெலுங்கானாவின் கே.எல்.இ.எப்., பல்கலை அணியை 3 - -1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
பரபரப்பான இறுதி போட்டியில், ஒடிசாவின் கே.ஐ.ஐ.டி., பல்கலை அணியுடன் பலப்பரீட்சை நடத்திய எஸ்.ஆர்.எம்., அணி வீரர்கள், அதிரடி சர்வீஸ் வாயிலாக புள்ளிகளை குவித்து, ஆட்டத்தை வசப்படுத்தி, 3 - -0 என்ற செட் கணக்கில் வென்று, சாம்பியன் கோப்பையை வென்றனர்.