/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
/
அகில இந்திய வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
அகில இந்திய வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
அகில இந்திய வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
ADDED : மே 24, 2025 11:50 PM

சென்னை :ஆந்திரா மாநிலம், பல்நாடு மாவட்டத்தில், அகில இந்திய வாலிபால் போட்டி, கடந்த 19ல் துவங்கி, 22ம் தேதியுடன் நிறைவடைந்தது.
போட்டியில், இருபாலரிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து, அணிகள் பங்கேற்றன. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் சென்னை ஐ.ஓ.பி., வங்கி அணிகள் எதிர்கொண்டன.
அதில், 26 - 24, 25 - 17, 32 - 24, 25 - 20 என்ற புள்ளிக்கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
சிறந்த தாக்குதல் வீரராக தருண், தடுப்பாளராக சயந்த், சிறந்த லிபரோ எனும் தனித்துவ வீரராக தங்கபாலு ஆகிய எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் தேர்வாகினர்.
அதேபோல், பெண்களுக்கான ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., - தெற்கு ரயில்வே அணிகள் எதிர்கொண்டன.
அதில், 25 - 16, 25 - 20, 22 - 25, 25 - 10 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டியின் சிறந்த வீராங்கனையாக கோபிகா, சிறந்த தாக்குதல் வீராங்கனையாக நிதிஷா, சிறந்த லிபரோ எனும் தனித்துவ வீராங்கனையாக ஜெயப்பிரியா, சிறந்த அமைப்பாளர் ஸ்ரீலட்சுமி ஆகிய எஸ்ஆர்.எம்., மாணவியர் தேர்வாகினர்.