/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கேலோ பல்கலை' வாள்வீச்சு போட்டி எஸ்.ஆர்.எம்., அணிக்கு வெள்ளி பதக்கம்

ADDED : நவ 29, 2025 03:02 AM

சென்னை: கேலோ பல்கலை வாள்வீச்சு போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணியினர் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளி பதக்கம் வென்று அசத்தினர்.
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், கேலோ இந்திய பல்கலை வாள்வீச்சு போட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது.
இதன் ஆடவர் பிரிவில், அரையிறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி, டாக்டர் பி.ஏ.எம்., பல்கலை அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், எஸ்.ஆர்.எம்., அணி 45 - 37 என்ற புள்ளிக்கணக்கில் எதிரணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து இறுதிப் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி 35 - 45 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. வெற்றி பெற்ற ஜி.என்.டி.யு., அணி தங்கப்பதக்கத்தையும், எஸ்.ஆர்.எம்., அணி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றின.