/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
/
மாநில நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
மாநில நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
மாநில நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
ADDED : ஆக 24, 2025 11:02 PM

சென்னை; துாத்துக்குடியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
'பின்ஸ்விம்மிங்' எனும் நீருக்கடியில் விளையாடும் போட்டிகள், துாத்துக்குடியில் உள்ள கேம்ஸ்வில்லே விளையாட்டு அகாடமியில் நேற்று முன்தினம் நடந்தன.
மாநில அளவிலான இப்போட்டியை, தமிழ்நாடு மாநில நீருக்கடியில் விளையாட்டு போட்டிகள் சங்கம், துாத்துக்குடி நீருக்கடியில் விளையாட்டு போட்டிகள் சங்கம் இணைந்து நடத்தின. இதில் 30 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டிகள் முடிவில், அதிக வெற்றிகளை பெற்ற சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.