/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலை அழைப்பு
/
மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலை அழைப்பு
ADDED : மார் 04, 2026 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலை சார்பில், 2026 - 27ம் கல்வியாண்டிற்கான 100 சதவீத உதவித்தொகை யுடன், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லுாரி சேர்க்கை மற்றும் தேர்வு விளையாட்டு போட்டிகள், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், வரும் ஏப்., 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான முன்பதிவை அந்த பல்கலை துவங்கி உள்ளது.
இதில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர், www.srmist.edu.in, http://www.srmist.edu.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என, எஸ்.ஆர்.எம்., பல்கலை உடற்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

