/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரிகளுக்கு இடையே பீச் வாலிபால் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன்
/
கல்லுாரிகளுக்கு இடையே பீச் வாலிபால் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன்
கல்லுாரிகளுக்கு இடையே பீச் வாலிபால் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன்
கல்லுாரிகளுக்கு இடையே பீச் வாலிபால் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன்
ADDED : ஆக 22, 2025 12:38 AM

சென்னை, கல்லுாரிகளுக்கு இடையே நடந்த பீச் வாலிபால் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு, கல்லுாரிகளுக்கு இடையே, ஆடவருக்கான பீச் வாலிபால் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்தது.
இதில், சென்னை மாவட்டத்தின் 10க்கும் அதிகமான கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள், 'லீக் கம் நாக் அவுட்' முறையில் நடந்தது.
அந்த வகையில் லீக் சுற்றில் அசத்தி, எஸ்.ஆர்.எம்., ப்ளு அணி, எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, எஸ்.ஆர்.எம்., ஸ்பைக்கர் அணி மற்றும் கற்பகம் கல்லுாரி 'பி' அணிகள், அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., ப்ளு, எஸ்.ஆர்.எம்., ஸ்பைக்கர் அணிகள் மோதின. இதில், எஸ்.ஆர்.எம்., ப்ளு அணி 16- - 21, 23 - -21, 21 - -19 என்ற புள்ளியில், எதிர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
அடுத்து நடந்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 21- - 15, 21- - 14 என்ற செட் கணக்கில், கற்பகம் கல்லுாரி 'பி' அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
விறுவிறுப்பான இறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, எஸ்.ஆர்.எம்., ப்ளு அணியை எதிர்த்து மோதியது. இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, எஸ்.ஆர்.எம்., ப்ளு அணியை, 21- - 14, 21 - -13 வீழ்த்தி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
***