ADDED : நவ 24, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் துர்காலட்சுமி, 40. தனியார் நிறுவன சூப்பர் மார்க்கெட் ஊழியர். இவர் அக்கடையில் பணம் கையாடல் செய்ததாக வந்த புகாரின்படி திருக்கழுக்குன்றம் எஸ்.எஸ்.ஐ., ராமஜெயம் விசாரித்துள்ளார்.
பயந்துபோன அப்பெண், நிறுவனத்திடம் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், அந்த பெண் தனியாக தனக்கு லஞ்சம் தர வேண்டும் என, எஸ்.எஸ்.ஐ., ராமஜெயம் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, எஸ்.பி., சாய் பிரணீத்திடம், துர்கா லட்சுமி புகார் அளித்தார். விசாரணையில், அப்பெண்ணிடம் எஸ்.எஸ்.ஐ., ராமஜெயம் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து, ராமஜெயத்தை 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., சாய் பிரணீத் உத்தரவிட்டார்.

