/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.எஸ்.என்., கோப்பை போட்டி எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., அபாரம்
/
எஸ்.எஸ்.என்., கோப்பை போட்டி எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., அபாரம்
எஸ்.எஸ்.என்., கோப்பை போட்டி எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., அபாரம்
எஸ்.எஸ்.என்., கோப்பை போட்டி எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., அபாரம்
ADDED : மார் 05, 2024 12:39 AM

சென்னை, எஸ்.எஸ்.என்., கல்லுாரி சார்பில், 20வது எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான, கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் சென்னை, களவாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடத்தியது.
இதில், மாநிலம் முழுதும் இருந்து, இருபாலரிலும் பல்வேறு கல்லுாரி அணிகள் பங்கேற்றன. டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஸ்குவாஷ், கால்பந்து, வாலிபால், செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில், லயோலா கல்லுாரி முதலிடத்தையும், எஸ்.எஸ்.என்., கல்லுாரி இரண்டாம் இடத்தையும் வென்றன. பெண்களில், எம்.ஓ.பி., வைஷ்ணவ முதலிடத்தையும், எஸ்.எஸ்.என்., அணி இரண்டாம் இடத்தையும் வென்றன.
கால்பந்து போட்டியில் வேவல்ஸ் அணி 4 - 2 என்ற கணக்கில், செயின்ட் ஜோசப் அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. பெண்களுக்கான செஸ் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவ அணி 8க்கு 8 என்ற கணக்கில், பி.எஸ்.ஜி., அணியை தோற்கடித்தது.
ஆடவருக்கான பேட்மின்டன் ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., அணி 2 - 0 என்ற கணக்கில், எஸ்.எஸ்.என்., அணியை தோற்கடித்தது. பெண்களில் எஸ்.ஆர்.எம்., அணி 2 - 0 என்ற கணக்கில், எம்.ஓ.பி., வைஷ்ணவ அணியை தோற்கடித்தது.
கூடைப்பந்தில், ஆடவரில் இந்துஸ்தான் அணி 74 - 58 என்ற கணக்கில் ஜேப்பியார் அணியையும், பெண்களில் எம்.ஓ.பி., வைஷ்ணவ் 62 - 49 என்ற கணக்கில் வேல்ஸ் பல்கலையையும் தோற்கடித்து முதலிடங்களை வென்றன.

