/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்பந்தில் செயின்ட் ஜோசப் 'சாம்பியன்'
/
கால்பந்தில் செயின்ட் ஜோசப் 'சாம்பியன்'
ADDED : அக் 02, 2024 12:07 AM

சென்னை, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலை, 3வது மண்டலத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கான கால்பந்து போட்டிகள், சிறுசேரி, முகமது சதக் கல்லுாரியில் நடந்தன.
இப்போட்டியில், அக்னி, தனலட்சுமி, எஸ்.எஸ்.என்., தங்க வேலு, ஈஸ்வரி, செயின்ட் ஜோசப், ஜேப்பியார் உட்பட 19 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
இதில், 'நாக் அவுட்' முறையில் நடத்தப்பட்ட முதல் சுற்றுப்போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி வீரர்கள், அரையிறுதியில் தனலட்சுமி பொறியியல் கல்லுாரி அணியை, 2 - -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில், பலம் பொருந்திய ஜேப்பியார் பல்கலை அணியை எதிர்த்து களமிறங்கிய செயின்ட் ஜோசப் அணியினர், 3 - -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினர்.