/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்சென்னை வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி வெற்றி
/
தென்சென்னை வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி வெற்றி
தென்சென்னை வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி வெற்றி
தென்சென்னை வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி வெற்றி
ADDED : நவ 20, 2024 12:10 AM

சென்னை, தென்சென்னை வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், 'நாக் அவுட்' சுற்றில், செயின்ட் பீட்ஸ் பள்ளி வெற்றி பெற்றது.
அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், தென் சென்னை வருவாய் மாவட்ட அளவில், மாணவருக்கான வாலிபால் போட்டி, சாந்தோம் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. அதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளிலும், தலா 10 பள்ளி அணிகள் எதிர்கொண்டன.
இதில், 17 வயது பிரிவில், செயின்ட் பீட்ஸ் பள்ளி, 25 - 14, 25 - 15 என்ற கணக்கில், ஜி.ஆர்.டி., பள்ளியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில், செயின்ட் பீட்ஸ் பள்ளி, 25 - 13, 25 - 8 என்ற கணக்கில், அரும்பாக்கம் டேனியல் தாமஸ் பள்ளியை வீழ்த்தியது. ஆலந்துார் மாண்போர்ட் பள்ளி, 25 - 10, 25 - 12 என்ற கணக்கில், கே.கே. நகர் ஸ்பிரிங் பீல்டு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மற்றொரு பிரிவான 19 வயதுக்குட்பட்டோரில், டி.ஏ.வி., பள்ளி, 25 - 17, 27 - 25 என்ற கணக்கில், சோழிங்கநல்லுார் பாரத் வித்யாலயா பள்ளியையும், ஜி.ஆர்.டி., பள்ளி, 25 - 23, 17 - 25, 25 - 16 என்ற கணக்கில், அடையார் ராஜா முத்தையா பள்ளியையும் தோற்கடித்தன. போட்டிகள் தொடர்கின்றன.