/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துாரில் முதல்வர் படைப்பகம் திறந்து வைத்தார் ஸ்டாலின்
/
கொளத்துாரில் முதல்வர் படைப்பகம் திறந்து வைத்தார் ஸ்டாலின்
கொளத்துாரில் முதல்வர் படைப்பகம் திறந்து வைத்தார் ஸ்டாலின்
கொளத்துாரில் முதல்வர் படைப்பகம் திறந்து வைத்தார் ஸ்டாலின்
ADDED : மார் 09, 2026 05:45 AM

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், 4.75 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட முதல்வர் படைப்பகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி மாறன் பூங்கா, 28.20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு, கருணாநிதி நுாற்றாண்டு நாணய வடிவில் நினைவு துாண் அமைக்கப்பட்டு உள்ளது.
கொளத்துார் தொகுதி ஜவஹர் நகரில், 4.75 கோடி ரூபாயில், முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நுாலகம், 4,127 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது.
பேப்பர் மில்ஸ் சாலையில், கொளத்துார் நவீன மீன் அங்காடி, 19.30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளது. இவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
கொளத்துார் தொகுதியில், 12.40 கோடி ரூபாயில் கழிவுநீர் உந்து நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
திரு.வி.க., நகர் சென்னை துவக்கப் பள்ளியில், 3.25 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம் என, 75 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
முன்னதாக, பல்லவன் சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 3,200 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படித்த 84 மாணவ - மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்டவற்றை, ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

