/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கூடைப்பந்து போட்டி எழும்பூரில் இன்று துவக்கம்
/
மாநில கூடைப்பந்து போட்டி எழும்பூரில் இன்று துவக்கம்
மாநில கூடைப்பந்து போட்டி எழும்பூரில் இன்று துவக்கம்
மாநில கூடைப்பந்து போட்டி எழும்பூரில் இன்று துவக்கம்
ADDED : ஜூன் 21, 2025 12:13 AM
சென்னை, எழும்பூரில், மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டி, இன்று துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது.
மேயர் ராதாகிருஷ்ணன் கிளப் சார்பில், மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இன்று துவங்குகிறது.
இப்போட்டியில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஜேப்பியார் பல்கலை, லயோலா உள்ளிட்ட ஆண்களில் 34 அணிகள், பெண்களில் 14 அணிகளும் பங்கேற்கின்றன. ஆண்களுக்கு 'நாக் அவுட்' மற்றும் லீக் முறையில், பெண்களுக்கு 'நாக் அவுட்' முறையிலும் போட்டிகள் நடக்கின்றன என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.