/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கூடைப்பந்து போட்டி 'பிசியோகேர்' அணி அபரம்
/
மாநில கூடைப்பந்து போட்டி 'பிசியோகேர்' அணி அபரம்
ADDED : ஏப் 25, 2025 11:49 PM

சென்னை:மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், சிறுமியருக்கான சிறப்பு ஆட்டத்தில், 'பிசியோகேர்' அணி வெற்றி பெற்றது.
இந்தியன் வங்கி மற்றும் மயிலாப்பூர் ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 19வது ஆண்டிற்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், முதற்கட்டமாக நேரு விளையாட்டு அரங்கில் நடக்கின்றன.
ஐ.சி.எப்., - இந்தியன் வங்கி, வருமான வரி, ரைசிங் ஸ்டார் உட்பட ஆண்களில் 72, பெண்களில் 32 என, மொத்தம் 104 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் மாலை சிறுமியர் மட்டும் பங்கேற்ற பெண்களுக்கான ஆட்டத்தில், பிசியோகேர் - ஸ்ரீ ராகவேந்திரா அணிகள் எதிர்கொண்டன. அதில், 70 - 42 என்ற கணக்கில் பிசியோகேர் அணி வெற்றி பெற்றது.
அதேபோல், மாலை முதல் இரவு நடந்த 'நாக் அவுட்' போட்டிகள் விபரம்:
அணிகள் / புள்ளிகள்
பெண்களுக்கான ஆட்டம் :
ஐ.சி.எப்., காலனி - ரெயின்போ அகாடமி / 37 - 36
குளோபல் அகாடமி - யூனிகான் / 65 - 44
எம்.சி.சி., அகாடமி - நார்த் வோக் / 29 - 09
ஆண்களுக்கா ஆட்டம் :
ஓப் அகாடமி - அடோமிக் அகாடமி / 60 - 40
பி.ஏ.கே.பி., - சென்னை துறைமுகம் ஹவுசிங் / 71 - 54
கிங்ஸ் பி.சி., - டெக்ஸ்டர்ஸ் / 62 - 41
***

