/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சிறுவர் செஸ் 250 வீரர்கள் உற்சாகம்
/
மாநில சிறுவர் செஸ் 250 வீரர்கள் உற்சாகம்
ADDED : நவ 17, 2024 10:27 PM

சென்னை:தாம்பரத்தில் நேற்று நடந்த சிறுவர்களுக்கான மாநில செஸ் போட்டியில், 250 வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சென்னை ராகவேந்திரா செஸ் அகடாமி மற்றும் சாரதா சிறுவர்கள் அகடாமி இணைந்து, மாநில அளவிலான சிறுவர்கள் செஸ் போட்டியை நேற்று நடத்தின. மேற்கு தாம்பரம், சாரதா அகாடமி வளாகத்தில் நடந்த இப்போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட, தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து, 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டிகள் 7, 9, 11, 13, 17 வயதுக்கு உட்பட்டோர் என, இருபாலரிலும் தனித்தனியாக சுவிஸ் அடிப்படையில், பிடே விதிப்படி, ஆறு சுற்றுகளாக, தலா 20 நிமிடங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல், 15 இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.