/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஐ.டி.,யில் மாநில செஸ் நாளை மறுநாளுக்குள் பதிவு
/
எம்.ஐ.டி.,யில் மாநில செஸ் நாளை மறுநாளுக்குள் பதிவு
எம்.ஐ.டி.,யில் மாநில செஸ் நாளை மறுநாளுக்குள் பதிவு
எம்.ஐ.டி.,யில் மாநில செஸ் நாளை மறுநாளுக்குள் பதிவு
ADDED : நவ 20, 2024 12:11 AM
சென்னை, குரோம்பேட்டை, எம்.ஐ.டி.,யில் நடக்க உள்ள மாநில செஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாளுக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டள்ளது.
ஜி.எம்., செஸ் அகாடமி மற்றும் எம்.ஐ.டி., இணைந்து, சிறுவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டியை, வரும் 24ம் தேதி நடத்துகின்றன. போட்டிகள், குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலையின் எம்.ஐ.டி., வளாகத்தில் நடக்கிறது. இதில், 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது.
அனைத்து பிரிவுகளிலும் முதல் 30 இடங்களை பிடிக்கும் மொத்தம், 350 சிறுவர், சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 8 வயது பிரிவில் பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. போட்டிகள் 'பிடே' விதிப்படி, சுவிஸ் அடிப்படையில், சுற்றுக்கு 20 நிமிடங்கள் நடக்கின்றன.
போட்டியில் பங்கேற்க விரும்பும் சிறுவர், சிறுமியர் நாளை மறுநாளான 22ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 99415 14097, 88382 29938 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.