தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில சதுரங்கம் போட்டி :சிறுவர்களுக்கு அழைப்பு

 மாநில சதுரங்கம் போட்டி :சிறுவர்களுக்கு அழைப்பு

 மாநில சதுரங்கம் போட்டி :சிறுவர்களுக்கு அழைப்பு


ADDED : ஏப் 25, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க, சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹயக்ரீவர் சதுரங்க அகாடமி சார்பில், 16வது மாநில அளவிலான சதுரங்க போட்டி, கிழக்கு தாம்பரம், கிரிஸ்ட் கிங் மெட்ரிக் பள்ளியில், மே 1ம் தேதி நடக்கிறது.

இதில், எட்டு, பத்து, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட இருபாலருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடக்க உள்ளன. போட்டிகள், 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் நடக்கின்றன.

போட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுவர் - சிறுமியர் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் தலா 15 பேருக்கு, கோப்பைகள் வழங்கப்படுகின்றன.

பங்கேற்க விரும்புவோர், 72001 01544, 87786 39020 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us