/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
/
மாநில சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 20, 2024 12:44 AM
சென்னை, அம்பத்துாரில் நடக்க உள்ள மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க, சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'ஏ - மேக்ஸ்' அகாடமி சார்பில், மூன்றாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி, வரும் 28ம் தேதி, அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளியில் நடக்கிறது.
இதில் எட்டு, 11, 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறுவர்கள் பங்கேற்க உள்ளனர்.
போட்டியில் ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெறும் சிறுவர் -- சிறுமியருக்கு கோப்பையும், பதக்கங்களும் வழங்கப்படும். 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள், 90252 45635, 73393 48675 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.