/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சதுரங்கம் போட்டி 20ல் முகப்பேரில் துவக்கம்
/
மாநில சதுரங்கம் போட்டி 20ல் முகப்பேரில் துவக்கம்
ADDED : ஏப் 12, 2025 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ஏ மேக்ஸ்' அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான ஏழாவது மாநில செஸ் போட்டி, வரும் 20ம் தேதி முகப்பேர், மேற்கு நொளம்பூரில் உள்ள டெக்லத்தான் அரங்கில் நடக்கிறது.
இதில், எட்டு, பத்து, 12, 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட பிரிவுகளில், தனித்தனியாக இருபாலருக்கும் நடக்கின்றன.
போட்டிகள் சுவிஸ் அடிப்படையில், பிடே விதிப்படி நடக்கின்றன. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், 18ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, 93605 53703, 94456 32077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.