ADDED : செப் 24, 2026 04:49 PM
சென்னை, செப்.25–
கோவையில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில். கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 23 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான மாநில கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடந்து வருகிறது. அரையிறுதிப்போட்டி நேற்று நடந்தது.
கோவை சூர்யபாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், கோவை அணி, தென்காசி அணியை எதிர்த்து மோதியது.
‘டாஸ்’ வென்ற தென்காசி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சண்முகராஜன், 27 ரன்கள் எடுத்தார். 27 ஓவர் முடிவில், 10 விக்கெட்டுகளை இழந்து, 73 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து, 74 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணிக்கு வீரர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். எதிரணியில், பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த கிஷோர், 32 ரன்களும், சித்தார்த், 37 ரன்களும் எடுத்தனர். முடிவில் கோவை அணி, 13 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு, 74 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
