ADDED : செப் 25, 2026 02:38 AM
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 23 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான மாநில கிரிக்கெட் அரையிறுதி போட்டி, கோவை சூர்யபாலா மைதானத்தில் நேற்று நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த தென்காசி அணி, 27 ஓவர் முடிவில், 10 விக்கெட்டுகளை இழந்து, 73 ரன்களில் சுருண்டது.
அடுத்து இறங்கிய கோவை அணி, 13 ஓவர்களில், இரு விக்கெட் இழப்புக்கு, 74 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், நிறுவனர் கணேசன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், பையனுாரில் நடந்து வருகின்றன.
நேற்றைய ஆட்டத்தில், எழும்பூர் டான் போஸ்கோ அணி, 30 ஓவர்களில் 203 ரன்கள் குவித்தது.
அடுத்து களம்கண்ட கொட்டிவாக்கம் ராமச்சந்திரா அணி, 28.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டான் போஸ்கோ அணி வெற்றி பெற்றது.
