/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ஜூனியர் கூடைப்பந்து 41 அணிகள் பலப்பரீசை
/
மாநில ஜூனியர் கூடைப்பந்து 41 அணிகள் பலப்பரீசை
ADDED : ஜூன் 08, 2025 12:18 AM

சென்னை, தமிழக கூடைப்பந்து சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடக்கின்றன.
ஆண்களுக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை துவங்கிய பெண்களுக்கான ஆட்டத்தில், சென்னை, சேலம், நீலகிரி, தேனி, கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட, 41 அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் போட்டியில், திருவள்ளூர் அணி, 79 - 23 என்ற புள்ளி கணக்கில் தர்மபுரி அணியையும், துாத்துக்குடி அணி, 70 - 30 என்ற கணக்கில் திருவண்ணாமலை அணியையும் வீழ்த்தின.
மற்றொரு போட்டியில், சென்னை 'ஏ ' அணி, 62 - 54 என்ற புள்ளி கணக்கில், விருதுநகர் அணியையும், தென்காசி அணி, 43 - 39 என்ற கணக்கில் நாமக்கல் அணியையும் தோற்கடித்தன.
திருப்பத்துார் மற்றும் காஞ்சிபுரம் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 51 - 45 என்ற கணக்கில், திருப்பத்துார் வெற்றி பெற்றது. செங்கல்பட்டு அணி, 51 - 45 என்ற கணக்கில், சென்னை 'பி' அணியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து, 10ம் தேதி வரை நடக்கின்றன.