/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 500 வீரர், வீராங்கனையர் மோதல்
/
மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 500 வீரர், வீராங்கனையர் மோதல்
மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 500 வீரர், வீராங்கனையர் மோதல்
மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 500 வீரர், வீராங்கனையர் மோதல்
ADDED : மே 11, 2025 12:23 AM

சென்னை,
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, நேற்று முன்தினம் துவங்கியது.
போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் நடக்கிறது.
இதில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில், கிக் லைட், புல் காண்டாக்ட், லோ கிக், கே - 1 ஸ்டைல், இசை வடிவம் உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் மோதி வருகின்றனர்.
போட்டிகள் நாளை வரை நடக்கின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்று தேர்வாகுவோர், வேலுாரில் நடக்க உள்ள தேசிய கிக் பாக்சிங் பயிற்சி முகாமிற்கு தகுதி பெறுவர் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.