/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
9ல் மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் துவக்கம்
/
9ல் மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் துவக்கம்
ADDED : மே 03, 2025 11:50 PM
சென்னை, தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 9ம் தேதி துவங்குகிறது.
போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் நடக்கின்றன.
இதில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில், கிக் லைட் உள்ளிட்ட வகையில், தொடர்ந்து 11ம் தேதி வரை மூன்று நாட்கள் போட்டிகள் நடக்கின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்று தேர்வாவோர், வேலுாரில் உள்ள தேசிய கிக் பாக்சிங் பயிற்சி முகாமிற்கு தகுதி பெறுவர் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.