/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி மாணவர்களுக்கு மாநில அளவில் பேச்சு போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கு மாநில அளவில் பேச்சு போட்டி
ADDED : ஜன 31, 2025 12:09 AM
சென்னைசேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், மாநில அளவில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, சென்னையில் அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இது குறித்து, சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் ஜெ.மோகன் வெளியிட்ட அறிக்கை:
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், மாநில அளவில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில், பிப்., 1 காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது.
இதில், 'வாசி இல்லாக் காசுபடி பெற்று வந்தார் வாகீசர்' எனும் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 'நச்சி இன்தமிழ் பாடிய ஞானசம்பந்தர்' எனும் திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம், 'பொருள்சிவன் என்று அருளாலேஉணர்ந்தறிந்தார்' எனும் சாக்கிய நாயனார் புராணம் ஆகிய தலைப்புகளில், பேச்சுப் போட்டி நடக்கிறது.
போட்டி துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன், நடுவர்கள் ஏதேனும் ஒரு தலைப்பை மாணவர்களுக்கு வழங்குவர். அந்த தலைப்பில்ஐந்து நிமிடம் பேச வேண்டும். முதல் சுற்றில் தேர்வாகும் மாணவர்களுக்கு, மதியம் இரண்டாம் சுற்று நடக்கும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 7,500 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் மற்றும் மூன்று பேருக்கு ஊக்கப் பரிசாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்.
விபரங்களுக்கு, 94872 67642, 90032 34158, 99623 86809 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

