மாநில பாரா நீச்சல் போட்டி வீரர் – வீராங்கனையர் அசத்தல்
மாநில பாரா நீச்சல் போட்டி வீரர் – வீராங்கனையர் அசத்தல்
ADDED : அக் 20, 2026 04:58 PM

சென்னை: மாநில பாரா நீச்சல் போட்டியில், பல்வேறு மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் – வீராங்கனையர் முதலிடம் பிடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தமிழ்நாடு பாரா நீச்சல் சங்கம் சார்பில், 12வது மாநில சீனியர் பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், 18ம் தேதி நடந்தது.
இதில், ஆண்களுக்கான 100 மீ., பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில், நாமக்கல் ஆர்.ராஜ்குமார், தர்மபுரி பி.வெங்கடேசன், திருநெல்வேலி எஸ்.ஜெயசெல்வன், சிவகங்கை ஏ.வேல்முருகன், கன்னியாகுமரி ஆர்.பாலாஜி, சென்னை எஸ்.ஹரிசங்கர், எஸ்.தினேஷ்குமார் ஆகியோர் தங்கள் பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில், ஈரோடு என்.தமிழ்மொழி, கிருஷ்ணகிரி என்.பூலட்சுமி, புதுக்கோட்டை எஸ்.ஈஸ்வரி, கிருஷ்ணகிரி தினல் ஜெயின் ஆகியோர் முதலிடம் பிடித்து அசத்தினர்.
இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட வீரர் – வீராங்கனையர், வரும் நவ., 11 முதல் 13ம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்க உள்ள தேசிய பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.
