/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ரக்பி கால்பந்து சென்னை அபாரம்
/
மாநில ரக்பி கால்பந்து சென்னை அபாரம்
ADDED : ஜன 09, 2024 12:21 AM

சென்னை,தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் மற்றும் ஆர்.எம்.கே., இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து, மாநில ரக்பி கால்பந்து போட்டியை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நேற்று துவங்கின.
சப் - ஜூனியருக்கான இப்போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 13 மாவட்ட அணிகள், இரு பாலரிலும் பங்கேற்றுள்ளன. போட்டிகள் 'நாக் அவுட்' முறையில் நடக்கின்றன.
மாணவர்களுக்கான காலிறுதிப் போட்டியில், நாகை அணி 25 - 15 கணக்கில் வேலுாரையும், நாமக்கல் 10 - 5 என்ற கணக்கில் சென்னையையும் வீழ்த்தின. ஜோலார்பேட்டை, 5 - 0 கணக்கில் கடலுாரையும், திருவள்ளூர், 25 - 10 கணக்கில் செங்கை அணியையும் தோற்கடித்தன.
மாணவியருக்கான ஆட்டங்களில், சென்னை அணி, 30 - 10 கணக்கில் விழுப்புரம் அணியையும், நாகை, 10 - 5 கணக்கில் வேலுார் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தன.
அதேபோல், திருவள்ளூர் அணி, 5 - 0 கணக்கில் ஜோலார்பேட்டையும், கடலுார் அணி, செங்கல்பட்டு அணியையும் தோற்டித்து வெற்றி பெற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.