ADDED : ஜூன் 18, 2026 03:16 AM
சென்னை: மாநில டேபிள் டென்னிஸ் போட்டி, ஐ.சி.எப்., மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், இருபாலருக்குமான மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஐ.சி.எப்., மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. 21ம் தேதி முடிகிறது.
இதில், 9 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு, ஓப்பன் பிரிவு, வெட்ரன், கார்ப்பரேட் என 16 பிரிவுகளில், போட்டிகள் நடக்கவுள்ளன. பல மாவட்டங்களைச் சேர்ந்த 1,200க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.
வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகையாக 4.40 லட்சம் ரூபாயும், கோப்பை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த முறை, சென்னையில் நடந்த மாநில ரேங்கிங் போட்டியில் சென்னையின் தருண், செலினா தீப்தி ஆகியோர், 'சாம்பியன்' பட்டம் கைப்பற்றி அசத்தினர்.
